
வணக்கம்
பிரதேச செயலகம் - மாவத்தகம
எங்கள் பார்வை
பொது மக்களுக்கு அதி உயர் சேவையனை வழங்தல்
எங்கள் நோக்கம்
வளங்களை உரிய முறையில் முகமைத்துவம் செய்து அரச கொள்கைகளின் அடிப்டையில் பொது மக்களுக்குசபை வழங்குதல்
நோக்கங்களுக்காக
- நிர்வாகப் பணியின் பயனுள்ள செயல்திறன் மற்றும் மேலாண்மை.
- நிதி நிர்வாகத்தை திறம்பட செயல்படுத்துதல் மற்றும் நடத்துதல்
- பயனுள்ள செயல்திறன் மற்றும் நிலக் கடமைகளின் மேலாண்மை
- சமூக நலன் மற்றும் சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துதல் மற்றும் மேலாண்மை செய்தல்
- திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துதல் மற்றும் மேலாண்மை செய்தல்
- சேவை பெறுபவர்களுக்கு அதிகபட்ச வாடிக்கையாளர் சேவையை வழங்குதல்
மதிப்புகள்
- அதிகாரிகளின் திறன்கள்
- கூட்டு முயற்சி
- நட்புரீதியான சேவையை வழங்குதல்
- சிகிச்சையின் சமத்துவம்
- கடமையில் அர்ப்பணிப்பு
- பொது நாட்களில் சீருடை பயன்படுத்துதல்
- வாடிக்கையாளர் சாசனத்தின்படி சேவைகளை வழங்குதல்
- சுற்றுச்சூழல் நட்பு அலுவலகங்களை பராமரிக்கவும்
- வாடிக்கையாளர் தேவைகளுக்கு நோக்குநிலை
- வேலைக்காக மின்-தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்
- புதிய அறிவை தொடர்ந்து புதுப்பித்தல்
- மதிப்பு அமைப்பு மற்றும் எட்டு விதிகளின்படி வேலை செய்தல்
மாவத்தகம பிரதேச செயலகத்தின் வரலாறு
மாவதகம பிரதேச செயலகம் வமேல் மாகாணத்தில் குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மாவதகம பிரதேச செயலகம், வடக்கில் இப்பாகமுவ பிரதேச செயலகத்தினாலும் தெற்கில் கண்டி மாவட்டத்தினாலும் கிழக்கில் ரிதீகம பிரதேச செயலகத்தினாலும் மேற்கில் மல்லவபிடிய பிரதேச செயலகத்தினாலும் சுற்றி வலைக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தின் பரப்பளவு 107.5 கி.மி. ஆகும். 71 கிராம அலுவலர் பிரிரவுளை கொண்டுள்ளது. குருனாகல் கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள இப்பிரதேச செயலகம், நிர்வாகத் தேவைகளுக்காக வேஉட,கன்தஹய,கன்நவய என மூன்று கோரளைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
மாவதகம பிரதேச செயலகத்தில் பிரதேச வருமானம் உத்தியோகத்தர் அலுவலகம் என்ற பெயரில் 1969.02.01 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாவத்தகம பிரதேச சபை அலுவலகம் முன்பாக இருந்த பழைய ஆயுர்வேத மருந்தகம் இருந்த இடத்தில் ஆரம்பத்தில் அமைக்கப்பட்டு இருந்த ஹிரியால பிரதேசம் செயலாளர் பிரிவுக்கு உட்பட்டிருந்த 4 பிரிவுகளுடன் அதன் பிரிவுகள் 36 ஆகும். முதலாவது வருமான நிருவாக உத்தியோகத்தராக திரு டப்ல்யு.எஷ்.உலூகல்ல திரு. ஜீ.பீ. ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதுடன் எழுது விளைஞர் 05 பேராம். துவிச்சக்கர வண்டி தகவல் வழங்குபவர் இருந்துள்ளார்.
மாதா என்ற ஒரு தேதை ஒருவரின் பிறந்த பூமி என்பதால் மாவதகம என்ற பெயரில் பிரசித்தம் அடைந்த்தாக குறிப்பிடப்படுகின்றது. விமலதர்மசூரிய மன்னரின் தநதையினால் ஓய்வு எடுப்பதற்காக தேவாலயம் ஒன்று கட்டப்பட்டு உள்ளது. அது 1899ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளதுடன் அன்று அது மாவதகம ரோமன் கத்தோலிக்க பாடசாலை என்றபெயரில் அழைக்கப்படுகின்றது.
வரலாற்று ரீதியான தகவல்கள்
- வேஉட குருவலேன விகரை
வேஉட குருவலேன விகரை வலகம்பா அரசனால் கட்டப்பட்டது. மாவதகம பரந்தன வீதியில் கற்பரையின் மீது மகுலான ரஜ மஹா விகரை அமைந்துள்ளது.இவ்விகரை 11 வது தப்புள அரசனின் விஷேட பாதுகாப்புக்காக இப்பிரதேச மக்களினால் திருகோனலை கிரிகடு சேயவை ஒத்தாக அமைக்கப்பட்டதாகும்.. இது இலங்கையில் பிரசித்திப்பெற்ற விகரையாகும்.
- இங்குருவத்தை டெம்பிட விஹரை
கண்டி ராஜதானிய காலத்தின் டெம்பிட விஹார சம்பந்தமாக மூல சாட்சிகள் இல்லாதத்துடன் பெறுமதியான சுவர் ஒவியங்களைக் கொண்டது
- திகம்பிடிய டெம்பிட விஹாரை
இந்த இடத்தில் தொல் பொருள் திணைக்களத்தினால் பொறுப் பேற்று உள்ளனர்
ஒல்லாந்து மற்றும் பிரிதானியரின் ஆட்சி அதிகாரம் மாவத்தகமையில் காணப்பட்ட போது, இப்பிரதேசத்தில் முஸ்லீம் மதமும் மறுமலர்ச்சிடைந்தது. பிரிதானியரின் ஆட்சி காலத்தில் நீதியை பேணுவதற்கு பிலஸ்ஸ நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. இந்நீதிமன்றம் தற்போதும் நடைமுறையில் உள்ளது.குருநாகல் நகரத்திற்கு நீர் வழங்கும் பிரதான நீர் ஊற்று இப்பிரதேசத்தின் உயர்ந்த மலைக்குன்றாகிய ஹதுருக் கன்ந்த முக்கியமானது.
மாவத்தகம பிரதேச செயலக பிரிவில் 80% மானவர்களின் பிரதான ஜீவனோபாயம் நெற் பயிர்செய்கையும் பெருந்தோட்ட பயிர்செய்கையும் ஆகும். சிறுபோக பெரும்போக பயிர் செய்கையில் நீர் மற்றும் ஆளனி பற்றாக்குறை நிலவுகிறது.விவசாயத்தை கைவிடுதல் வேலையில்லா பிரச்சனயை அதிகரிக்கிறது. பெருந்தோட்ட பயிர்செய்கைகளாக தென்னை, இறப்பர், வழை, றம்புட்டான், பலா,இரப்பலா ஆகிவை காணப்படுகிறது.
மாவத்தகம பிரதேச செயலக பிரிவில் பாரியளவான கைதொழில் பேட்டைகள் காணப்படுகின்றன. இக்கைதொழில் பேட்டைகளில் அதிகளவான இளைஞர் யுவதிகள் வேலை செய்கின்றனர். பவுன்டேசன் காமன்ட் ,டைமெக்ஸ் காமன்ட் யுனிசலா (தனி) வரை ஆகிய நிருவனங்களில் 6166 ஆட்கள் வேலை செய்கின்றனர். வயம்ப பிரின்ட்பெக், நிருவனத்தில் 91 ஆட்களும் டோபேக்கா புரஸ்ஸின்ங் நிருவனத்தில் 30 ஆட்களும் பிரைவரி லங்கா (தனி) வரை நிருவனத்தில் 132 ஆட்களும் வேலை செய்கின்றனர். இங்கு அதிகமான நிருவனங்கள் ஆடை உற்பத்தியில் ஈடுபடுகிறது. வயம்ப பிரின்ட்பெக் நிருவனம் பைகள் உற்பத்தியில் ஈடுபடுகிறது. இங்கு பாரியளவான வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதனால் இப்பிரதேசத்தில் நிலவுகின்ற இளைஞர் யுவதிகளுக்கான வேலையில்லா பிரச்சனையை கனிசமானளவு தீர்க்க முடிகின்றது.
1968 முதல் பணியாற்றிய பிரதேச செயலாளர்கள்
| பெயர் | முதல் | வரை |
| டபிள்யூ.எஸ். ஹுலுகல்ல | 1968 | 1970 |
| சிரிபால மெதவெல | 1970 | 1975 |
| ஏ.எம்.எல்.பி.பொலகொல்ல | 1975 | 1976 |
| ஈ.ஈ.எஸ். எதிரிசிங்ஹ | 1977 | 1977 |
| டபிள்யூ.கொடவெல | 1977 | 1979 |
| நிமல் அத்துடாவகே | 1979 | 1981 |
| ரி.பி.எம்.பி. தஸநாயக்க | 1981 | 1991 |
| எச்.எம்.குனதிலக்க | 1992 | 1993 |
| எச்.பி.பி.பி. ஹியராபிடிய | 1994 | 1999 |
| ஆர்.எம்.எஸ்.பி. ரத்நாயக்க | 2000 | 2002 |
| ஆர்.எம்.பி.பி. ராஜபக்ஷ | 2000 | 2002 |
| அசோகா ஸ்வர்னலதா | 2002 | 2007 |
| நிமல் கொடலகெதர | 2007 | 2007 |
| யு.ஜி.ஆர். ஆரியரத்ன | 2007 | 2010 |
| நிமல் கொடவெலகெதர | 2010 | 2010 |
| ஈ.எம்.எம்.எஸ். ஏக்கநாயக்க | 2010 | 2015 |
| எம்.எம்.ஏ.பி. மஹவத்த | 2015 | 2018 |
| ஈ.ஏ.எஸ். எதிரிசிங்ஹ | 2018 | 2020 |
| டி.பி.எஸ் குமார | 2020 | 2020 |
| எம். எஸ். ஜனக | 2021 | 2025 |
| டி.பி.எஸ் குமார | 2025 | தற்போது வரை |














